பெங்களூரு : பெங்களூரில் ரூ. 500 கோடி செலவில் மிக உயரமான ஸ்கை டெக் (Skydeck) கோபுரம் கட்ட கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 250 மீ உயரத்திற்குக் கட்டப்படும் இக்கோபுரம், டெல்லியின் குதுப் மினாரைவிட 3 மடங்கு உயரம் என கூறப்படுகிறது. இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில், தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரமாக இது கருதப்படும்.