சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் அளித்த பேட்டி ஒன்றில், சென்னையிலிருந்து ஒரு பையன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை வீழ்த்தியதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. அஸ்வின் செய்திருப்பது மாபெரும் சாதனை. தமிழக கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது மற்றவர்கள் அவர்களை கூர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பார்கள். ஒன்று அல்லது 2 போட்டிகளில் சொதப்பினால் எப்போது அவனை அணியை விட்டு தூக்கலாம் என்று அனைவரும் காத்துக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் அஸ்வின் அனைத்தையும் மீறி 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதே சமயம் அஸ்வின் தற்போது வேண்டுமென்றே பந்துவீச்சில் அதிக வேரியேஷன் காட்டுகிறார். அது வேண்டாம் அஸ்வின்! நீங்கள் எப்போதும் போல் ஒரே மாதிரி பந்து வீசுங்கள். அப்படி வீசினாலே, உங்களுக்கு நிச்சயம் விக்கெட் கிடைக்கும். நீங்கள் விக்கெட் கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என்று ஸ்ரீகாந்த் கூறினார். இந்த பேச்சைக் கேட்ட அஸ்வின் கண்டிப்பாக நீங்கள் சொல்வதை நான் களத்தில் செய்கிறேன் சார் என்று தெரிவித்துள்ளார்.