சென்னை: ஆருத்ரா மோசடியில் தலைமறைவாக உள்ள நடிகர் ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இண்டர்போல் உதவியுடன் துபாய் நாட்டில் பதுங்கியுள்ள ஆருத்ரா நிறுவன இயக்குநர்களை பிடிக்க போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது. ரூ.2,438 கோடி ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் மோசடி செய்த ரூ.500 கோடி துபாயில் பதுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.500 கோடி வரை துபாயில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கண்டுபிடித்தது.