அரூர் : அரூர் பைபாஸ் ரோட்டில், அரூர் வட்டாரத்தில் உள்ள பொக்லைன் வாகன உரிமையாளர்கள் சங்கம் சார்பில், உதிரி பாகங்கள் விலை உயர்வு, புதிய வாகனங்கள் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் மற்றும் சாலை வரி உயர்வு உள்ளிட்டவற்றை வாபஸ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டு நாள், அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
போராட்டத்தில், 100க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது ஒரு மணி நேரத்திற்கு மட்டும் ரூ.2500 வாடகை, இரண்டு மணி நேரத்திற்கு ரூ.3000 வாடகை அடுத்த ஒரு மணி நேரத்திற்கும் ரூ.1200 வாடகை வழங்ககோரி போராட்டம் நடக்கிறது. இதில் தலைவர் பாரதிராஜா, செயலாளர் பொன்னுரங்கம், பொருளாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.