விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தனியர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள வடகரை கிராமத்தில் செய்யல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை வேலை தொடங்கிய போது எதிர்பாராத விதமாக பட்டாசுகள் இடையே உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
அந்த கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் வெடிவிபத்து ஏற்பட்ட கட்டிடத்திற்கு சற்று தொலைவில் இருந்ததால் அவர்கள் உயிரிதப்பியுள்ளனர். வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் தீயணைப்புதுறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அருப்புகோட்டை ஏஎஸ்பி மதிவாணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.