விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே ரயில் படிக்கட்டில் பயணம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் இருவர் பலியாகியுள்ளனர். நாகர்கோவில்- கோவை ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்வது தொடர்பாக இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆர்.ஆர்.நகர் பகுதியில் செல்லும்போது ஏற்பட்ட தகராறில் ரயிலில் இருந்து தவறி விழுந்து இருவர் பலியாகியுள்ளனர். படியில் இருந்து விழுந்து ஒருவர் நிகழ்விடத்திலேயே இறந்தநிலையில் மற்றொருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.