இடாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலம் உப்பன் சுபன்சிரி மாவட்டத்தின் தபோரிஜோவில் இருந்து லிபாரடாவின் பசார் பகுதிக்கு ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் காலை டிரக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, தபி கிராமத்தின் அருகே டிரான்ஸ் அருணாச்சல் நெடுஞ்சாலையில் டிரக் வந்த போது திடீரென சாலையிலிருந்து விலகி பள்ளத்தாக்கில் விழுந்தது. உடனடியாக உள்ளூர் இளைஞர்கள் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 3 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலியானவர்கள் ஹவில்தார் நக்ஹத் சிங், நாயக் முகேஷ் குமார், கிரீனாடியர் ஆஷிஷ் குமார் என ராணுவம் தரப்பில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.