இட்டாநகர் : அருணாச்சல் மாநிலம் அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விழுந்து 3 ராணுவ வீரர்கள் பலியாகினர். தபி கிராமம் அருகே ஆழமான பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்ததில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ வீரர்கள் நாகாத் சிங், நாயக் முகேஷ் குமார், கிரெனேடியர் ஆஷிஷ் குமார் ஆகியோர் பலியாகினர்.
இந்த விபத்தில் மூன்று ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக இட்டாநகரில் உள்ள போலீஸ் அதிகாரி தெரிவித்தார். காயமடைந்த 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து பற்றிய தகவல்கள் இன்னும் வரவில்லை. உயிரிழந்த வீரர்கள் ஹவில்தார், நக்கத் சிங், நாயக் முகேஷ் குமார் மற்றும் கிரெனேடியர் ஆஷிஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ராணுவ வீரர்களின் மரணத்திற்கு கிழக்கு ராணுவ தளபதி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் அருணாச்சல பிரதேசத்தில் பணியில் இருந்தபோது இறந்தார், அவரது குடும்பத்தினருடன் இந்திய இராணுவம் உறுதியாக நிற்கிறது.