அண்ணா நகர்: அரும்பாக்கத்தில் மூதாட்டியின் வீட்டில் இருந்த 7 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரும்பாக்கம் அசோக நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்மாள்(72). இந்நிலையில், மாணிக்கம்மாள் தனது நகைகளை சர்பார்க்க பீரோவை திறந்துள்ளார்.
அப்போது, லாக்கரில் இருந்த 7 சவரன் தங்க நகைகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, மாணிக்கம்மாள் நகைகள் திருட்டு குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து நகைகள் திருட்டு குறித்து விசாரிட்டு வருகின்றனர்.