சென்னை: ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடியில் கைது செய்யப்பட்ட திருச்சி கிளை இயக்குநர் சூசைராஜ் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.சூசைராஜின் ஜாமின் மனுவைத் இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.2,438 கோடி மோசடி நடந்த ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர். நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்த சூசைராஜ் ஜாமின் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது.