சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் என்றல் இதுதான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரு கோடி பேர் ஒரே நேரத்தில் ரூ. 1000 மாதா மாதம் பெறப் போகிறார்கள். ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெறுகிறார்கள் என்பதால் கிடைக்கும் பாராட்டு, கோடி பாராட்டுகளுக்கு சமம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.