சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு யாராவது லஞ்சம் கேட்டால் ஒரு ரூபாய் கூட தராதீர்கள் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஒரு வீடு கட்ட அரசு ரூ.3.5 லட்சத்தை ஒதுக்கும் நிலையில் சிலர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக தகவல் வருகிறது. யாராவது லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க வேண்டும்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பேரம் பேசி வாங்குவதை விட பிச்சை எடுக்கலாம் என லஞ்சம் கேட்பவர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம். உரிமைத் தொகை பெறாதவர் பட்டியலை தயாரித்து அவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.