சென்னை: முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் “தொலைநோக்குச் சிந்தனையாளர்- கலைஞர்” எனும் குழுவின் சார்பில் குறும்பட போட்டி (Short film Competition) மற்றும் சுருள்பட போட்டி (Reels Competition)க்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக தொலைநோக்குச் சிந்தனையாளர்- கலைஞர் எனும் குழுவின் சார்பில் குறும்படபோட்டி (Short film Competition) (Reels Competition) நடத்துவது தொடர்பான செய்தி வெளியீடு 31.10.2023 அன்று வெளியிடப்பட்டது. அச்செய்தி வெளியீட்டில் இப்போட்டிகளுக்கான விண்ணப்பங்களுடன் கூடிய குறும்படங்கள் மற்றும் சுருள்படங்களை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இப்போட்டிகளுக்கான கால அவகாசம் 15.01.2024 வரை நீட்டிக்கப்பட்டது. அதனடிப்படையில் குறும்படங்கள் மற்றும் சுருள் படங்கள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளன. இதனை பார்வையிட்ட குழு, மேற்கூறிய தலைப்பில் குறும்படங்கள் மற்றும் சுருள்படங்கள். ஆகியவற்றை சமர்ப்பிக்க மேலும் கால அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளது.
இப்போட்டிக்களுக்காக ஏற்கனவே குறும்படங்கள் மற்றும் சுருள் படங்களை அனுப்பிய போட்டியாளர்கள் அப்படங்களை மீண்டும் அனுப்ப தேவையில்லை. புதியதாக கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொலைநோக்குச் சிந்தனையாளர்- கலைஞர் (உதாரணமாக சமூக நீதி, கல்வியில் புரட்சி, சுகாதார துறையில் புரட்சி, தொழிற்துறை மேம்பாடு, மாநில அரசின் உரிமை, பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற/நகர்ப்புற வளர்ச்சி) என்ற தலைப்பில் குறும்படங்களை (Short film) (அதிகபட்சம் 10 நிமிடங்கள்) உருவாக்கி அதனை விண்ணப்பங்களுடன் 31.08.2024 தேதிக்குள் (shortfilmkalaignar100@gmail.com) அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதேபோல் சுருள்பட போட்டியில் (Reels) கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் எனும் தலைப்பில் புதிய சுருள்படங்களை 30 வினாடிகள் முதல்
1 நிமிடம் வரை இருக்கும் வகையில் உருவாக்கி விண்ணப்பங்களுடன் 31.08.2024 தேதிக்குள் (reelskalaignar100@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. குறும்பட போட்டி (Short film Competition) மற்றும் சுருள்பட போட்டி (Reels Competition) களுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை https://dipr.tn.gov.in ( (Press release) எண் .2179, நாள் (31.10.2023) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்குச் சிந்தனையாளர்- கலைஞர் எனும் குழு சார்பாக நடத்தப்படும் குறும்படபோட்டியின் (short film Competition) விதிமுறைகள் பின்வருமாறு:- (i) போட்டிக்கு விண்ணப்பித்தல் :- எந்தவொரு இந்திய குடிமகனும் இப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ஒரு படம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். இப்போட்டிக்கு அனுப்பப்படும் குறும்படங்கள் போட்டிக்கு, விண்ணப்பிப்பவரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். உள்ள விண்ணப்பப் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
(ii) நுழைவு கட்டணம் :- நுழைவு கட்டணம் இல்லை (iii) படத்தின் மைய கருத்து – தொலைநோக்குச் சிந்தனையாளர்- கலைஞர் உதாரணமாக, சமூக நீதியில் கலைஞரின் சாதனை, கல்வியில் புரட்சி, சுகாதார துறையில் புரட்சி. தொழிற்துறை மேம்பாடு, மாநில அரசின் உரிமை, பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற/ நகர்ப்புற வளர்ச்சி என்பனவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பொருண்மைகளை மைய கருத்தாக அத்துறையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது தொலை நோக்குச் சிந்தனையில் உருவான திட்டங்கள்/ செயல்பாடுகள், அதனால் சமூகத்திற்கு / தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பயன்கள் குறித்து விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும். (iv) படத்தின் மொழி – தமிழ் (v) குறும்படத்தின் கால அளவு: அதிகபட்சம் 10 நிமிடங்கள் (vi) திரைப்பட வடிவம்: குறும்படத்தினை (MP4 format. Full HD(1080p) or 1920X1820p) கேமரா அல்லது வேறு சாதனங்கள் மூலமாகவும் எடுக்கலாம். குறும்படத்தின் அளவு 2 GB-க்கு மேல் இருக்கக்கூடாது. குறும்படத்தின் தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் இயக்குநரின் பெயர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். (vii) நடுவர் மன்றம் :- நடுவர் குழு வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும். (viii) பரிசு வழங்குதல் குறும்படங்களிருந்து – விண்ணப்பிக்கும் நபர்களின் சிறப்பான குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே காசோலை வழங்கப்படும். (ix) பரிசுத் தொகை : முதல் பரிசு ரூ. 2 இலட்சம், இரண்டாம் பரிசு ரூ.1.50 இலட்சம், மூன்றாம் பரிசு ரூ. 1 இலட்சம்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்குச் சிந்தனையாளர்- கலைஞர் எனும் குழு சார்பாக நடத்தப்படும் சுருள்பட போட்டியின் (Reels Competition) விதிமுறைகள் பின்வருமாறு:- (i) போட்டிக்கு விண்ணப்பித்தல் :- எந்தவொரு இந்திய குடிமகனும் இப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ஒரு படம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். இப்போட்டிக்கு அனுப்பப்படும் சுருள்படங்கள் போட்டிக்கு, விண்ணப்பிப்பவரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். எந்தவொரு சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளத்தில் இடம் பெற்றிருக்க கூடாது. போட்டியாளர்கள் இணைப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். (ii) நுழைவு கட்டணம் :- நுழைவு கட்டணம் இல்லை (iii) படத்தின் மைய கருத்து :- தொலைநோக்குச் சிந்தனையாளர்- கலைஞர் உதாரணமாக, சமூக நீதியில் கலைஞரின் சாதனை. கல்வியில் புரட்சி, சுகாதார துறையில் புரட்சி, தொழிற்துறை மேம்பாடு, மாநில அரசின் உரிமை, பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற/ நகர்ப்புற வளர்ச்சி
என்பனவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பொருண்மைகளை மைய கருத்தாக அத்துறையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது தொலை நோக்குச் சிந்தனையில் உருவான திட்டங்கள்/ செயல்பாடுகள், அதனால் சமூகத்திற்கு / தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பயன்கள் குறித்து விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும். (iv) படத்தின் மொழி – தமிழ் (v) சுருள்படத்தின் கால அளவு : 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை இருக்க வேண்டும். (vi) திரைப்பட வடிவம்:- சுருள்படத்தினை ( MP4 format, Full HD(1080p) or 1920X1820p) மூலமாகவும் எடுக்கலாம். சுருள்படத்தின் அளவு 500 MB-க்கு மேல் இருக்கக்கூடாது. சுருள் படத்தின் தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் இயக்குநரின் பெயர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். (vii) நடுவர் மன்றம் :- நடுவர் குழு வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும். (viii) பரிசு வழங்குதல் :- சுருள்படங்களிருந்து விண்ணப்பிக்கும் நபர்களின் சிறப்பான சுருள்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே காசோலை வழங்கப்படும். (ix) பரிசு தொகை :- 10 நபர்களுக்கு தலா ரூ.10,000/-மும் பராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.
(x) அனுப்பும் செய்த முறை விண்ணப்பத்தினை shortfilmkalaignar100@gmail.com :- முறையாக பூர்த்தி சுருள்படத்துடன் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டும். (xi) கடைசி தேதி : 31.08.2024 (மாலை 6.00 மணிக்கு மேல் பெறப்படும் பதிவுகள் ஏற்றுகொள்ளப்படாது) (xii) உறுதி மொழி படிவம் :- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் பின்வரும் உறுதிமொழியினை அளிக்க வேண்டும் :”கலைஞர் சுருள்பட போட்டியின் அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நான் படித்து அதற்கு உடன்பட்டு, என்னால் போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள சுருள்படங்களை இணையதளம் / சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யவும், பயன்படுத்தவும் உரிமையை வழங்குகிறேன். என்னால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சுருள்படத்தின் பதிப்புரிமை குறித்து ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அப்பிரச்சனையை கையாளும் பொறுப்பு என் மீது மட்டுமே இருக்கும். அரசுக்கு அல்ல.” (xiii) திரையிடல் உரிமை :- வெற்றி பெரும் சுருள்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்ற அரசுக்கு உரிமை உண்டு. (xiv) தவறான உள்ளீடுகள்:- முழுமையடையப்படாத விண்ணப்பங்கள் மற்றும் உள்ளீடுகள், இப்போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்படாதவை தவறானதாக கருதப்பட்டு இப்போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படாததாக கருதப்படும். (xv) முடிவுகள் : போட்டி குறித்த முடிவுகள் இணையத்திலும் பத்திரிக்கை செய்தி வாயிலாகவும் வெளியிடப்படும்.