சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இறுதி ஆலோசனை கூட்டம் தொடங்கியது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் செப்.15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்பட உள்ளது. ரூ.1,000 பெற குடும்பத் தலைவிகளுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டுகளை வழங்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.