சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தமிழ்நாடுமட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய ஒன்றியமே வாழ்த்துகிறது என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். அண்ணா பிறந்த நாளில் கலைஞர் நூற்றாண்டில் மகளிர் மேன்மைக்கான திட்டமும் சரித்திரம் படைப்பது உறுதி என்றும் தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயனாளிகள் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்தும் உள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.