செங்கல்பட்டு: செங்கல்பட்டில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் விண்ணப்பபதிவு சிறப்பு முகாம் நடைப்பெற உள்ளது என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்ப பதிவு முதற்கட்ட முகாம்கள் கடந்த மாதம் 24ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த முதற்கட்ட முகாம்களில் அந்த தேதி வரையிலான விண்ணப்பங்களை பதிவு செய்யாத பயனாளிகள் வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில் இரு தினங்களில் தங்களுக்கு உரிய விண்ணப்ப பதிவு சிறப்பு முகாம்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.