சென்னை: எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் அரசு தாய்சேய் நல மருத்துவமனை ஆகிய இரு மருத்துவமனைக்கு சேர்த்து கட்டப்பட்டு வரும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உடனிருப்போர் தங்கும் விடுதி, உணவு தயாரிக்கும் கட்டிடத்திற்கான கட்டுமானப் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். கலைஞர் மாரத்தான் மூலம் திரட்டப்பட்ட நிதி, சென்னை மாநகராட்சி மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய நிதிகளின் கீழ் ரூ.5.89 கோடியில் விடுதி கட்டப்பட்டு வருகிறது.
ஆய்வின் போது எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், துணை ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன், சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் தேரணிராஜன், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் ரமாசந்திரமோகன், அரசு தாய்சேய் நல மருத்துவமனை இயக்குநர் குப்புலட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.