சென்னை: கலைஞர் நாணயம் வெளியிடப்பட்டதை சக்சஸ்… சக்சஸ்… சக்சஸ்… எனக் கூறி நடிகர் சத்யராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: கலைஞர் வசனம் எழுதிய பராசக்தி படத்தில் நடிகர் சிவாஜிகணேசன் அறிமுக காட்சியில் அவர் ஒரு நாணயத்தை கையில் வைத்துக் கொண்டு சக்சஸ்… சக்சஸ்… சக்சஸ்… என கூறியபடி சிரிப்பார்.
அதேபோல் கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தை கையில் வைத்துக் கொண்டு தந்தை பெரியாரின் சமூகநீதிக்கு கிடைத்த சக்சஸ்… சக்சஸ்… சக்சஸ்… அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடிற்கு கிடைத்த சக்சஸ்… சக்சஸ்… சக்சஸ்… முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட ஆட்சிக்கு கிடைத்த சக்சஸ்… சக்சஸ்… சக்சஸ்… நாற்பதிற்கு நாற்பது வென்றெடுத்த திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கு சக்சஸ்… சக்சஸ்… சக்சஸ்… என்று கூறிக்கொண்டே போகலாம். வாழ்த்துக்கள்! மகிழ்ச்சிகள்!! பெருமைகள்!!!. இவ்வாறு அவர் பேசினார்.