சென்னை: கலைஞர் உரிமை திட்டத்துக்கு விண்ணப்பித்து ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.