ஆவடி: என் உயிரினும் மேலான கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ தலைமையில் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் எம்.எஸ்.கே டைமன் மஹாலில் நடைபெற்றது. இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.சுரேஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆர்.செந்தாமரை, ஜி.சி.சி.கருணாநிதி, வி.ஜெ.உமா மகேஸ்வரன், தெ.பிரியாகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் என்றென்றும் பெரியார் ஏன்? அண்ணா கண்ட மாநில சுயாட்சி, கலைஞரின் தொலைநோக்குப் பார்வை, மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர், கலைஞர்-நவீன தமிழ்நாட்டின் சிற்பி, இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், சமூக நீதிக் காவலர் கலைஞர், தமிழ்நாட்டு குடும்பங்களில் திமுக, பேசி வென்ற இயக்கம், திராவிட மாடல் நாயகர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகிய தலைப்பில் 150 மேற்பட்டோர் கல்லூரி மாணவர்கள் மாணவிகள் இளைஞர்கள் கலந்து கொண்டு பேச்சுப் போட்டியில் பேசினார்கள்.
இதில் நடுவராக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கவிஞர் மனுஷ்யபுத்திரன் கோவை சம்பத் ஆகியோர் பங்கேற்றனர். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் பங்கேற்றவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசு பொருட்கள் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் நடுகுத்தகை கே.ஜெ.ரமேஷ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக் மாநில மாணவரணி இணைச் செயலாளர் சி.ஜெரால்டு, மாவட்ட நிர்வாகிகள் ம.ராஜி, வி.ஜெ.சீனிவாசன், எஸ்.ஜெயபாலன், பா.நரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜி.ராஜேந்திரன், ஜி.விமல்வர்ஷன், காஞ்சனா சுதாகர், மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் செயலாளர்கள் சன்.பிரகாஷ், மேயர் உதயகுமார், பேபிசேகர், பொன்.விஜயன், என்.இ.கே.மூர்த்தி, டி.தேசிங்கு, ப.ச.கமலேஷ், ஆர்.ஜெயசீலன், சே.பிரேம் ஆனந்த், ஜி.ஆர்.திருமலை, தங்கம் முரளி, தி.வே.முனுசாமி, அமுதா பேபிசேகர், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் தர், அஃப்ரிடி, சதீஷ், புவனேஷ், மகேஷ் ரங்கநாதன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கலந்து கொண்டனர். முடிவில் ஜி.துர்கா பிராசத் நன்றி கூறினார்.