மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண், அ.வல்லாளப்பட்டியை சேர்ந்த தீபன்ராஜ் (23) என்பவரை காதலித்து வந்தார். இவர் அழைத்ததன்பேரில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அந்த பெண் சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தீபன்ராஜின் நண்பர்களான சுகுமாரன் (24), மதன் (25) ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.
இருவரும் தீபன்ராஜ் அனுமதியுடன், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். பின்னர் அவர்களுடன் வந்து மேலூர் மகளிர் போலீசில், இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், தீபன்ராஜ் உட்பட 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.