ஆண்டிபட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து வெளியிட்ட கருத்தை எதிர்த்து, உபி சாமியார் பரம்ஹம்ஸா ஆச்சார்யா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல, மன்னார்குடி ஜீயர் எனப்படும் செண்டலங்கார செண்பக மன்னார், தனியார் டிவிக்கு வழங்கிய பேட்டியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இருவரது பேச்சும் கொலை முயற்சிக்கு தூண்டும் வகையில் உள்ளது. எனவே, இருவரையும் கைது செய்யக்கோரி பல்வேறு கட்சிகள் சார்பில் தேனி எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது