பணி: Post Graduate Teacher (PGT)/Trained Graduate Teachers (TGT)/ Primary Teachers (PRT).
தகுதி: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட்., படித்திருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிகளுக்கு ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று பி.எட்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு 2 வருட ஆசிிரயர் பயிற்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியுடன் CET/TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். CET/TET தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது: பணி அனுபவம் இல்லாதவர்கள் 40 வயதிற்குள்ளும், 5 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் உள்ளவர்கள் 57 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இத் தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் செப்.30 மற்றும் அக்.1 ஆகிய தேதிகளில் நடைபெறும். www.awesindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.9.2023.