சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ரவுடி புதூர் அப்புவின் துப்பாக்கி பறிமுதல் செய்தனர். காசிமேட்டைச் சேர்ந்த ரவுடி வீரராகவனை நீதிமன்ற பிடிவாரண்டில் போலீசார் கைது செய்திருந்தனர். ரவுடி வீரராகவனிடமிருந்த துப்பாக்கி, 4 தோட்டாக்கள் வழக்கறிஞர் மூலம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கி, ரவுடி புதூர் அப்புக்கு சொந்தமானது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
Advertisement


