சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி சம்பவ செந்தில் சீசிங் ராஜா உள்ளிட்ட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதில் சம்பவ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கிருஷ்ணகுமார் (எ) மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர் தனது மனைவியுடன் வெளிநாட்டிற்கு தப்பி சென்றது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.ஆம்ஸ்ட்ராங் கொலை யில் இவர் பண உதவி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த பலரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மொட்டை கிருஷ்ணன் வழக்கறிஞர் என்பதால் அவருடன் பிரபலங்கள் பலர் தொடர்பில் இருந்துள்ளனர். இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் பலரும் தொடர்பில் இருப்பதால் போலீசார் அவர்களுடன் தொடர்பில் இருந்த பலரையும் விசாரித்து வருகின்றனர். வழக்கில் சம்பந்தம் இல்லாத பட்சத்தில் அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தும் வருகின்றனர்.