சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்தக் கொலை வழக்கில் போலீசார் ஒவ்வொரு கட்டமாக அலசி ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 27 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த திருவேங்கடம் என்பவரை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
துபாயில் இருந்து அதிகாலையில் விமானத்தில் சென்னை வந்த திருவேங்கடத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் ரவுடி சம்பவ செந்தில் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். ரவுடி சம்பவ செந்தில் பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி சம்பவ செந்திலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டிஸ் மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டு போலீசார் தீவிரமாக அவரை தேடி வருகின்றனர். இதேபோல் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு அவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.