Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக துபாய் சென்று திரும்பியவரிடம் போலீசார் தீவிர விசாரணை

சென்னை: துபாய் சென்று சென்னை திரும்பியவரிடம், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாயில் இருந்து நேற்று காலை சென்னைக்கு வந்த திருவேங்கடம் என்ற நபரை அழைத்துச் சென்று எழும்பூரில் உள்ள ரவுடிகள் தனிப்பிரிவில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர், வடசென்னையை சேர்ந்த நபர் என்பதும், தற்போது கொட்டிவாக்கம் பகுதியில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு ஒன்றில் இவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.

நேற்று இவர் சென்னை விமான நிலையம் வந்தவுடன் விமான நிலைய போலீசார் சாஸ்திரி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும், அதற்குள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீசார் விமான நிலையம் சென்று, திருவேங்கடத்தை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. திருவேங்கடத்தின் நண்பர் ஒருவர் சம்பவ செந்திலுக்கு மிக நெருக்கமானவர் என்பதால் சம்பவ செந்தில் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மணிவண்ணன் என்ற நபரை போலீசார் காவலில் எடுத்து கடந்த 2 நாட்களாக விசாரித்து வந்நனர். நேற்று அவருக்கு போலீஸ் காவல் முடிவடைந்ததால் நேற்று மாலை மணிவண்ணனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் மீண்டும் அவரை பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர்.