சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு முடியும் வரை 4 பேருக்கும் தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோருக்கு பார் கவுன்சில் தடை விதித்தது.