உத்திரமேரூர்: உத்திரமேரூரில், பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. லோக் ஜனசக்தி கட்சியின் மாநில செயலாளர் அம்பேத் ராஜா தலைமையில், பகுஜன் சமாஜ் கட்சியின் காஞ்சி மாவட்ட தலைவர் சுரேஷ் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைதொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் திருவுருவப்படம் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.