சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் இருந்த திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட திருமலை, மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் நடமாட்டம் தொடர்பான தகவல்களை கொலை கும்பலுக்கு கொடுத்தவர்தான் ஆட்டோ ஓட்டுநரான திருமலை.