சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தாதா நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனிடம் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல தாதா வியாசர்பாடி நாகேந்திரன், அவரது மகன் அசுவத்தாமன் உள்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஸ்வத்தாமனை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. எழும்பூர் நீதிமன்ற உத்தரவை அடுத்து அஸ்வத்தாமனிடம் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்
ரியல் எஸ்டேட் தொழிலில் மோதல் ஏற்பட்டதா? தொழில் நிறுவனங்களில் இருந்து மாதந்தோறும் மாமூல் வசூலிப்பதற்கு ஆம்ஸ்ட்ராங் இடையூறாக இருந்தாரா?, எந்த விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங்குடன் மோதல் போக்கு? எத்தனை ஆண்டுகளாக ஆம்ஸ்ட்ராங் தரப்பு உடன் முன்விரோதம் இருந்தது?, நாகேந்திரன் சிறையில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங்கை மிரட்டியது உண்மையா? துப்பாக்கியை காட்டி ஆம்ஸ்ட்ராங்கை மிரட்டியது உண்மையா?,
கொலையாளிகளை ஒருங்கிணைத்தது எப்படி? அவர்களுக்கு யார் மூலமாக பணம் விநியோகிக்கப்பட்டது?, கொலையாளிகள் நாகேந்திரனை சிறையில் சந்தித்து சதி ஆலோசனையில் ஈடுபட்டார்களா? கொலையில் அரசியல் பின்புலம் இருக்கிறதா?, கேள்விகளை கேட்டு அஸ்வத்தாமன் அளிக்கும் பதிலை போலீசார் வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர்.