சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச்செயலாளர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வழக்கில் சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் தலைமறைவாக உள்ளதால் சிபிஐக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட நிலையில் காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு
0