சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடியை செப்டம்பர் 2-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் செம்பியம் போலீஸ் கைது செய்தது. ஆந்திராவில் பதுங்கி இருந்த ஆற்காடு சுரேஷின் மனைவியை தனிப்படை போலீஸ் நேற்று சுற்றி வளைத்து பிடித்தது. கைது செய்யப்பட்ட பொற்கொடியை செம்பியம் போலீஸ் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர் .