சென்னை: ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் மர்ம நபர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் கடிதம் வந்ததை அடுத்து ஆம்ஸ்ட்ராங் குடும்பதினருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அயனாவரத்தில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் குழந்தையை கடத்தி விடுவதுடன் அவரது குடும்பத்தினர் கொலை செய்து விடுவதாக சதீஷ் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.