புதுடெல்லி: இந்தியாவை சேர்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி(63)பிரிட்டனில் வசித்து வருகிறார்.இவர் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை நடத்தியது,ஆயுத இடைத்தகராக செயல்பட்டது உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 2015ம் ஆண்டு வருமான வரித்துறை ரெய்டு நடத்தியதை தொடர்ந்து அவர் பிரிட்டனுக்கு தப்பி சென்றார். அவரை நாடு கடத்தும் படி பிரிட்டனுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில்,சஞ்சய் பண்டாரி தொடர்புடைய பண மோசடி வழக்கில் தொழிலதிபரும் பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேரா இன்று விசாரணைக்கு ஆஜராகும் படி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரி கூறுகையில், கடந்த 10ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அப்போது தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும் நடைமுறைகளின்படி கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டி உள்ளது என்று நீதிமன்றத்தில் வதேரா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரை இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆயுத வியாபாரியுடன் தொடர்பு ராபர்ட் வதேராவுக்கு ஈடி சம்மன்
0