அரியலூர்: அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட வெடி மூலப்பொருட்கள் குடோனுக்கு சீல் வைத்து ஒருவரை கைது செய்துள்ளனர். அனுமதியில்லாத இடத்தில் குடோன் அமைத்திருந்த நிலையில் 92 மூட்டை வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்தனர். தஞ்சையை சேர்ந்த வெடி மூலப்பொருட்கள் குடோனின் உரிமையாளர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்