அரியலூர்: அரியலூரில் குழந்தையை தூக்கி விளையாடியதால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டார். வீட்டின் அருகே விளையாடிய குழந்தையை தலைகீழாக தூக்கி விளையாடியதால் தகராறு ஏற்பட்டுள்ளது. பேரனை தலைகீழாக தூக்கி விளையாடியதால் தாத்தா பாலகிருஷ்ணன், ரஞ்சித் என்பவரை கண்டித்துள்ளார். தகராறு முற்றவே பாலகிருஷ்ணனும் அவரது மகன் பாலாஜியும் சேர்ந்து ரஞ்சித்தை கத்தியால் குத்தியுள்ளனர். ரஞ்சித் உயிரிழந்த நிலையில் பாலகிருஷ்ணன், பாலாஜியை காவல்துறை கைது செய்தது.
அரியலூரில் குழந்தையை தூக்கி விளையாடியதால் தகராறு: இளைஞர் குத்திக் கொலை
0