தேனி: கம்பம் அருகே சண்முக நதி அணை பகுதியில் அரிசிக்கொம்பன் யானை 2 ஆவது நாளாக தஞ்சம் ஏற்பட்டுள்ளது. அணை பகுதியை ஒட்டியுள்ள சண்முகநாதன் கோயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் அரிசிக்கொம்பன் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் புகுந்துள்ள அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.