பச்சரிசி மாவு – 1 கப்,
மோர் – ½ கப்,
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,
கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத் தூள் – ½ டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து,
காய்ந்த மிளகாய் – 2.
செய்முறை:
பச்சரிசி மாவை உப்பு, நீர் மோர் தெளித்து கலந்து உதிரியாக வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து தீயை மிதமாக வைத்து மாவுக் கலவையை சேர்த்து கிளறவும். தேவையானால் சிறிது தண்ணீர் தெளிக்கவும். மாவு வெந்து நிறம் மாறி உதிரியாகும். சூடாக சாப்பிடவும்.