Thursday, February 29, 2024
Home » சினிமா படப்பிடிப்புக்கு சென்றபோது இயக்குநர் விஜய்யிடம் தகராறு செய்து மேலாளர் மீது ஹெல்மெட்டால் தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் மூலம் போதை ஆசாமிக்கு வலை

சினிமா படப்பிடிப்புக்கு சென்றபோது இயக்குநர் விஜய்யிடம் தகராறு செய்து மேலாளர் மீது ஹெல்மெட்டால் தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் மூலம் போதை ஆசாமிக்கு வலை

by Ranjith

சென்னை: சினிமா படப்பிடிப்புக்காக காரில் சென்ற இயக்குநர் விஜய்யை வழிமறித்து, பைக்கில் சென்ற போதை ஆசாமி, கார் கண்ணாடியை உடைக்க முயன்றார். அதை தடுக்க முயன்ற மேலாளரை ஹெல்மெட்டால் தாக்கினார். இந்த சம்பவம் தி.நகரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் பிரபல திரைப்பட இயக்குநர் விஜய் வசித்து வருகிறார். இவர் ‘தலைவா’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். நேற்று காலை தனது உதவி இயக்குநர்கள், மேலாளர் ஹனிவர்மா ஆகியோருடன் புதிய சினிமா படப்பிடிப்புக்காக இயக்குநர் விஜய் காரில் சென்று கொண்டிருந்தார்.

அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் சாலை சந்திப்பு அருகே சென்றபோது, திடீரென பைக்கில் வந்த போதை ஆசாமி, வழிமறித்து காரின் கண்ணாடியை உடைக்கும் வகையில் தாக்கியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத இயக்குநர் விஜய் காரை நிறுத்தினர். பிறகு போதை ஆசாமியிடம் ஏன் கண்ணாடி மீது தாக்குகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு போதை ஆசாமி இயக்குநரை ஆபாசமாக பேசி தாக்க முயன்றுள்ளார். இதை அவரது மேலாளர் ஹனிவர்மா செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
உடனே போதை ஆசாமி, ஏன் வீடியோ எடுக்கிறாய் என்று கூறி மேலாளரை ஹெல்மெட்டால் தலையில் தாக்கினார்.

அதிர்ச்சியடைந்த இயக்குநர் விஜய் மற்றும் அவரது உதவி இயக்குநர்கள் காவல்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் வருவதை பார்த்த போதை ஆசாமி பைக்கில் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி இயக்குநர் விஜய் மற்றும் அவரது மேலாளர் ஹனிவர்மா ஆகியோர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் உதவி இயக்குநர்கள் எடுத்த வீடியோ மற்றும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, தப்பி ஓடிய போதை ஆசாமியை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

4 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi