சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் விருப்பமான ஸ்பைடர் மேனை கவுரவிக்கும் விதமாக அர்ஜென்டினா தலைநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரம் பேர் ஸ்பைடர் மேன் உடையுடன் ஒரே இடத்தில் கூடினர். இன்ஸ்டாகிராம் மூலம் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று கூடிய ரசிகர்கள் ஆடி, பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதற்கு முன் கடந்த ஜூன் மாதம் மலேசியாவில் 688 பேர் ஸ்பைடர் மேன் உடையுடன் ஒரே இடத்தில் கூடியதே சாதனையாக இருந்தது. அதனை முறியடிக்கும் விதமாக இருந்த இந்த நிகழ்வு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.











அர்ஜென்டினாவில் ஸ்பைடர் மேன் உடையுடன் கூடிய ஆயிரம் பேர்.. உலக சாதனைக்காக ரசிகர்கள் முயற்சி..!!
by Nithya