தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் தவாக பொதுக்கூட்டத்தில் நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ பேசியதாவது: நானா தற்குறி?. ஸ்கிரிப்ட் எழுதி 100 பசங்களை வரவழைத்து, செலக்ட் பண்ணி அவர்களை பேச வைக்கிறீர்கள். எந்த நடிகர்களாக இருந்தாலும், தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன? வேல்முருகன் ஆற்றிய பங்களிப்பு என்ன? ஒரே மேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறேன். போராளிகளை பற்றி பொறுக்கிகளிடம் கேட்காதீர்கள். போக்கிரிகளிடம் கேட்காதீர்கள். ரஜினியை விட நீ பெரிய கொம்பனா? அள்ளி அள்ளி கொடுத்தவர் விஜயகாந்த்.
தமிழ்நாட்டில் பாலா என்கிற துணை நடிகர் ஒருவர், தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு வீடுகள் கட்டி, ஆம்புலன்ஸ் வாங்க உதவி புரிந்து வருகிறார். அவர் சூட்டிங் நடத்துவதில்லை. ஷோ நடத்துவதில்லை. அகரம் பவுண்டேஷன் ஷோ மற்றும் சூட்டிங் நடத்துவதில்லை, ராகவா லாரன்ஸ் தான் சம்பாதித்த பணத்தை, முதியோர் இல்லங்கள், ஆசிரமங்களுக்கு வழங்கி வருகிறார். அவர் ஷோ நடத்தவில்லை. அரசியலுக்கு வாங்க, மக்களோடு நில்லுங்க. நீங்கள் எல்லாம் 10,12வது படிக்கும் மாணவர்களுக்கு பரிசு கொடுத்து வருகிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.