சென்னை: தமிழக அரசு கள் இறக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை வைத்துள்ளார். சென்னையில், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு கள் இறக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது, தமிழக மக்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் கள் இறக்கி விற்பனை செய்கிறோம். அரசியலமைப்பு சட்டத்தின் படி மற்றும் உலக வழிமுறைப்படி, கள் உணவு என தமிழக அரசு சட்டத்தை மாற்றி இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
‘கள் இறக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது’
0