ஆசிய விளையாட்டுப்போட்டி கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கி கடந்த 8ம் தேதி முடிவடைந்த நிலையில் பல பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று 80க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றனர். அந்த வகையில் வில்வித்தை ஆண்கள் காம்பவுண்டு பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரவீன் ஓஜஸ், அபிஷேக் வர்மா மற்றும் பிரதமேஷ் ஜவகர் ஆகியோர் அடங்கிய அணி சீன தைபே அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி 234-224 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.இதையடுத்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்கொரிய அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் தென்கொரியாவை 235-230 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. அன்று ஒரே நாளில் மட்டும் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்று சாதித்தது. இதேபோல் ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர் மற்றும் அதிதி கோபிசந்த் சுவாமி ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் கூட்டு அணி, கூட்டு மகளிர் அணி இறுதிப் போட்டியில் சீன தைபே அணியை வீழ்த்தி பர்னீத் கவுர், ஜோதி சுரேகா மற்றும் அதிதி கோபிசந்த் அடங்கிய இந்திய வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.