சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்தவர்களுக்கு பிரச்சனை வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இறைப்பணி செய்யும் அர்ச்சகர்களுக்கு கோயில்களில் எந்தவித பிரச்சனை வந்தாலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார்.