புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் டிராக்டர் மோதி உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் கையில் தட்டுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த சேவுகபெருமாள் இருசக்கர வாகனத்தில் சென்றபோது டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடற்கூறாய்விற்காக அவரது உடல் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சேவுக பெருமாள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். திடீரென நேற்று 100-க்கும் மேற்பட்டோர் கையில் தட்டுகளை ஏந்தி வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து பிச்சை எடுத்து நூதன முறையில் போராடினர். இதனிடையே சேவுக பெருமாள் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.