வேலூர்: வேலூர் மாவட்டம் ஆரணி அருகே வேன் டயர் வெடித்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு, 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். புதுச்சேரி பிரத்தியங்கிரா தேவி கோயிலுக்கு சென்றபோது விண்ணமங்கலம் பகுதியில் வேன் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் பலத்த காயம் அடைந்த 22 பேரும் ஆரணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.