தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விதைத்திருவிழா, மரபு விதை கண்காட்சி, நாட்டு ரக விதைகள் பகிர்வு, உணவுத்திருவிழா என வேளாண் சார்ந்த நிகழ்ச்சிகள் முன்னெப்போதையும் விட தற்போது அதிகளவில் நடந்து வருகின்றன. வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்கள் சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிற்சி வகுப்புகள், விவசாயிகளின் சந்திப்புகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. அத்தகைய நிகழ்ச்சிகளை முன்கூட்டியே விவசாயிகள் அறிந்துகொள்ள பாலம் அமைக்கிறது இந்த அரங்கம்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 21ம் தேதி, பயோபிளாக் தொழில்நுட்ப முறையில் மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடக்கிறது. விஞ்ஞான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பிலான பயிற்சி வகுப்பு 25ம் தேதி நடக்கிறது. இதில் செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு : 99405 42371
செருசோலை அமைப்பின் மூலம் கோவை சூலூர் தென்றல் நகர் அருகே உள்ள பூந்தோட்டத்தில் ஆண்டு முழுவதும் வருவாய் தரும் ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு பற்றி நேரடி களப்பயிற்சி வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. ஆர்வமுள்ள விவசாயிகள் கலந்துகொண்டு பயனடையலாம்.
தொடர்புக்கு : 79044 40266
தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் கறிவேப்பிலை, கத்தரி மற்றும் செடி அவரையில் சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பிலான பயிற்சி வகுப்பு வரும் 26ம் தேதியும், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களும், அதனை தடுக்கும் வழிமுறைகளும் என்ற தலைப்பிலான பயிற்சி வகுப்பு 27ம் தேதியும் கள்ளக்குறிச்சி மாவட்டம், காளசமுத்திரம் பகுதியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெறுகிறது.
தொடர்புக்கு : 83009 78770