சென்னை: தமிழகத்தில் நிலவகூடிய வளிமண்டல சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கையானது விடுக்கபட்டுள்ளது. மேலும் அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சியானது நிலவிவருகிறது.
இதன் காரணமாக மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக தென்னிந்திய பகுதிகளில் அடுத்து வரக்கூடிய 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல் தமிழகத்தை பொறுத்த வரையில், இன்றும் நாளையும் கனமழை பெய்ய கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த மழையின் தாக்கம் மதியம் 1 மணி வரை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.