அப்ரிலியா டியோனோ 457 மோட்டார் சைக்கிள், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த மிலன் மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இதில், 457 சிசி பேரரல் டிவின் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 47.6 எச்பி பவரையும், 43.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், ஸ்லிப் அசிஸ்ட் இடம் பெற்றுள்ளன.
வழக்கமான டிரை-பல்புகளுக்கு பதிலாக, இரண்டு எல்இடி ஹெட்லைட்டுகள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.3.95 லட்சம். யமஹா எம்டி-03, கேடிஎம் 390 டியூக் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.